42 வயதிலும் குறையாத இளமை!! நடிகை சினேகாவின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாக இருந்து 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் புன்னகை அரசியாகவும் திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த சினேகா, நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி குழந்தை மற்றும் குடும்பத்தை பார்த்து வந்தார். அதன்பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள சினேகா, தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கோட் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

விஜய்க்கு ஜோடியாக 20 ஆண்டுகள் கழித்து நடித்து வரும் சினேகா, இன்னும் சில நாட்கள் மட்டும் தான் விஜய்யுடன் ஷூட்டிங் இருக்கிறது என்று சமீபத்தில் கோட் படத்தின் அப்டேட் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தற்போது 42 வயதாகும் நடிகை சினேகா இளமை தோற்றத்துடன் காணப்படுவதை பார்த்து ரசிகரக்ள் மெய்மறந்து வருகிறார்கள். தற்போது சேலையில் எடுத்த க்யூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளார்.