முடிவுக்கு வருகிறதா GOAT வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா

Vijay Greatest of All Time Box office
By Kathick Sep 27, 2024 03:30 AM GMT
Kathick

Kathick

Report

தளபதி விஜய் - வெங்கட் பிரபு கூட்டணி எப்போது இணையும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக வெளிவந்த திரைப்படம் தான் GOAT. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா என 90ஸ் நடிகர் நடிகைகள் நடித்திருந்தனர்.

மேலும் 80ஸ் சினிமாவில் கலக்கிய மோகன் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் 22 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள GOAT திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

முடிவுக்கு வருகிறதா GOAT வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா | Goat Movie Box Office

அதன்படி, 22 நாட்களில் உலகளவில் ரூ. 428 கோடி வரை GOAT படம் வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 21 நாட்கள் முடிவில் ரூ. 427 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்படும் நிலையில், நேற்று ஒரு நாளில் ரூ. 1 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.

இதன்மூலம் GOAT படத்தின் வசூல் முடிவுக்கு வருகிறதா என கேள்வி எழுந்துள்ளது. புதிய படங்களின் வருகை காரணமாகவும், GOAT படத்தின் மீது இருந்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாகவும் தான் லியோ படத்தை விட GOAT படத்தின் வசூல் குறைந்துவிட்டது என சொல்லப்படுகிறது.