வசூலில் அடிவாங்கிய கோட்.. பல கோடி நஷ்டமா? தளபதி விஜய்க்கே இந்த நிலைமையா
Vijay
Venkat Prabhu
Greatest of All Time
By Kathick
தளபதி விஜய் நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளிவந்த திரைப்படம் கோட். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். மேலும் ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருந்தனர்.
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனாலும் முதல் நாள் உலகளவில் ரூ. 100 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
உலகளவில் ரூ. 100 கோடி வசூல் செய்திருந்தாலும், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் இதுவரை ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ரூ. 21 கோடிக்கு இப்படத்தை பிசினஸ் செய்துள்ள நிலையில், முதல் நாள் ரூ. 4 கோடி முதல் ரூ. 5 கோடி வரை தான் வசூல் ஆகியுள்ளது. இதனால் படத்திற்கு அங்கு நஷ்டம் ஏற்படுமா என கேள்வி எழுந்துள்ளது.