GOAT-ஆல் பல கோடி நஷ்டமா..மெளனம் கலைத்த தயாரிப்பாளர் அர்ச்சனா..
Vijay
Venkat Prabhu
Gossip Today
Greatest of All Time
By Edward
கோட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய், தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்துள்ளார். படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி பான் இந்தியன் படமாக தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சியில் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனாவும் கலந்து கொண்டு பல கேள்விக்கு பதிலளித்துள்ளனர்.
லாபம்
அதில், விஜய்யின் கோட் படத்தின் பட்ஜெட் அதிகம் என்று சொன்னீர்கள். வியாபாரம் உங்களுக்கு திருப்தியாக இருந்ததா என்று பத்திரிக்கையாளர் ஒருவர் அர்ச்சனாவிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ஆமாம் படம் லாபம்தான், இப்போதே லாபம் தான், எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி என்று அர்ச்சனா பகிர்ந்துள்ளார்.