ஷப்ப்பா..எப்படித் தான் தூக்கம் வருதோ, நான்சென்ஸ்!! கடும்கோபத்தில் நடிகை திரிஷா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படத்தை தொடர்ந்து நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி குட் பேட் அக்லி படம் செம மாஸாக வெளியாகியது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் குட் பேட் அக்லி படத்தில் நடித்துள்ள திரிஷா சமுகவலைத்தளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதில், "ஷப்ப்பா...டாக்சிக் ஆட்களே, உங்களுக்கு எல்லாம் எப்படித் தான் தூக்கம் வருதோ?? சோஷியல் மீடியாவில் அடுத்தவர்களை பற்றி நான்சென்ஸ் போஸ்ட் போடுவது தான் உங்கள் வேலையா?. இது கோழைத்தனம். காட் பிளஸ் யூ ஆல் ரியலி".. என்று கூறியிருக்கிறார்.
இதனை பார்த்த நெட்டின்சன்கள் என்னாச்சு, ஏதாச்சு என்று பதறியபடி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
