திடீர் விசிட்.. நெப்போலியன் குடும்பத்தை சந்தித்த கோபிநாத்! எதற்கு?

Napoleon Viral Video Tamil Actors
By Bhavya Oct 27, 2025 06:30 AM GMT
Report

நெப்போலியன்

நடிப்பு, அரசியல் என புகழின் உச்சத்தில் இருந்த நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் சிகிச்சைக்காக பல வருடங்களுக்கு முன்பே அனைத்தையும் விட்டு விலகி அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார்.

சமீபத்தில் இவருடைய மகன் தனுஷ் திருமணம் ஜப்பானில் படு கோலாகலமாக நடந்து முடிந்தது.

இதில், பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். அமெரிக்காவுக்குச் செல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலங்கள், நெப்போலியன் வீட்டிற்குச் சென்று அவர்களை சந்தித்து நலம் விசாரிப்பது வழக்கமான ஒன்று.

திடீர் விசிட்.. நெப்போலியன் குடும்பத்தை சந்தித்த கோபிநாத்! எதற்கு? | Gopinath Visit To Napoleon Home Video Goes Viral

திடீர் விசிட்! 

இந்நிலையில், ராஜ்குமார் & மகேஷ் அவர்களது கிளியர் ஸ்கை நிறுவனம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று, பிரபல தொகுப்பாளர் கோபிநாத் நெப்போலியன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்துள்ளார்.

தற்போது இது தொடர்பான வீடியோவை நெப்போலியன் அவரது இன்ஸ்டா தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை கண்டு பலர் எதற்கு இந்த திடீர் விசிட் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.