39 வயதான ஹாலிவுட் நடிகை மரணம்!! கொலையா? என சந்தேகிக்கும் போலிஸ்..
நடிகை மிஷேல் டிராக்டன்பெர்க்
ஹாலிவுட் சினிமாவில் வில்லத்தனம் நிறைந்த நடிப்பினால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை மிஷேல் டிராக்டன்பெர்க். காசிப் கேர்ள் என்ற படத்தில் ஜார்ஜினா ஸ்பார்க்ஸ் ரோலில் நடித்து புகழ்பெற்று, பஃபி தி வாம்பயர் படத்தில் நடித்து பல விருதுகளை வென்றார்.
3 வயதில் நடிக்க ஆரம்பித்த மிஷேல், தி அட்வெண்ட்ச்சர்ஸ் ஆஃப் ஃபீட் அண்ட் ஃபீட் என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்து 36 ஆண்டுகளாக நடித்து வந்தார்.
சமீபத்தில் ரசிகர் ஒருவர் மிஷேலுக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியிருந்தார். இதனை பார்த்த மிஷேல், நான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை எதைவைத்து கூறுகிறீர்கள், எனக்கு விவரமாக கூறுங்கள். எனக்கு 38 வயதாகிறது, எனக்கு 14 வயதில்லை என்றும் அதன்பின் ஆரோக்கத்துடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யவில்லை என்று கூறி பதிலடி கொடுத்திருந்தார்.
மரணம்
இந்நிலையில் மிஷேல் நியூயார்க்கில் இருக்கும் அப்பார்ட்மெண்ட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அண்மையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட மிஷேலின் மரணத்திற்கு இதுதான் காரணமாக இருக்கும் என்று பலர் கூறுகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் காவல்த்துறை தரப்பில் இதனை ஏற்றுக்கொண்டாலும் நடிகையின் மரணத்திற்கு வேறு காரணங்கள் இருக்குமோ? அவரை யாராவது கொலை செய்துவிட்டார்களோ எனவும் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் ஹாலிவுட் பக்கம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
