எனக்கு அப்படி ஒன்றும் நடக்கவில்லை! இதோடு நிறுத்துங்கள்! கர்ணன்பட நடிகை கோபம்..
கடந்த ஒரு வாரமாக கொரோனா வைரஸை தாண்டி பெரிதாக பேசப்பட்டு வரும் விஷயம் பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மாணவிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட செய்திதான். ஆன்லை வகுப்பின் போது பல மாணவிகளிடம் பாலியல் ரீதியாக கொடுமைபடுத்தி வருவதாக புகாரளித்து ஆசிரிய ராஜகோபாலனை போக்சோ சட்டத்தின் கீழ் 5 நாட்கள் விசாரணையில் காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இச்செய்தியால் பலர் கோபத்தில் சமுகவலைத்தளங்களில் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதேசம்யம் இதுபோன்று பாலியல் ரீதியாக கொடுமைகளை சந்தித்தவர்கள் புகார்களை அளித்தும் வருகிறார்கள். இதுபற்றி திரைபிரபலங்களும் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
அதில் 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் கெளரி கிஷன். நடிகை கெளரி கிஷன் சில தினங்களுக்கு முன் நானும் இப்படியன தொந்தரவுக்கு ஆளாகினேன் என்று கூறி விளக்கமாக கூறினார்.
அடையாறு பள்ளியில் படித்தபோது, ஆசிரியர்கள் சக மாணவ மாணவிகளை அசிங்கமாக பேசுவது, சாதி, உடல் பற்றி சாடுவது, உடல் அமைப்பு மற்றும் கேரக்டரை வைத்து கிண்டல் செய்வது, ஆதாரமற்ற குற்றங்களை திணிப்பது என கொடுமைகளை அவர்கள் என்னிடம் கூறியுள்ளனர் என்று தெரிவித்தார். ஆனால், சிலர் இதை தவறாக நினைத்து நண்பர்களின் கசப்பான அனுபவக்களை பகிர்ந்த செய்தியை கூறிய இடத்தில் “நான் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டேன் என்றும் தவறாக சில வார்த்தைகளை பயன்படுத்தியும் குறிப்பிட்டுள்ளனர்.
எனக்கு பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தல்களும் நடக்கவில்லை. ஊடகங்கள் பிஎஸ்பிபி பள்ளியுடன் என்னை வைத்து தவறாக இணைத்து செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். இதனை இதோடு நிறுத்திக்கொள்ளுங்கள் என்று கூறி அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார் கெளரி கிஷன்.
I’d like to clarify that I’ve not faced any kind of sexual abuse in school.
— Gouri G Kishan (@Gourayy) May 27, 2021
All other media agencies who’ve twisted the story to draw parallels with the PSBB issue, please refrain! ?
Thank you for verifying @dhanyarajendran from @thenewsminute pic.twitter.com/QN0SSsHll1