38 ஆண்டு திருமண வாழ்க்கை..அத்தைமுறை பெண்ணுடன் காதல்!! வேறொரு பெண்ணுடன் தொடர்பில் நடிகர்
பாலிவுட்டில் ஒரு காலக்கட்டத்தில் மனம் கவர்ந்த முன்னணி நடிகராக திகழ்ந்த நடிகர் கோவிந்தா, சுனிதா அஹுஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமண வாழ்க்கைக்கு இப்போது 38 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இத்தனை வருடங்களுக்குப்பின் அவர்களின் உறவில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 61 வயதான கோவிந்தாவை விட்டு பிரிய சுனிதா அஹுஜா முடிவெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவிந்தா - சுனிதா
1987ல் கோவிந்தா மற்றும் சுனிதா திருமணம் செய்து அவ்ர்களுக்கு முதல் குழந்தை பிறந்தப்பின் தான் இருவரும் திருமணத்தை அறிவித்தனர். 38 ஆண்டுகளாக வாழ்ந்த இத்தம்பதியினர் சமீபகாலமாக பிரச்சனைகளை சந்தித்து வந்த நிலையில் பிரிவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சுனிதா, தன்னை கணவர் கோவிந்தா ஏமாற்றிவிட்டார், கொடுமைப்படுத்துகிறார், வேறு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதன்பின் இருவரும் சமரசமாகிய நிலையிம் 30 வயதான மராத்தி சினிமா நடிகையுடன் கோவிந்தா உறவில் இருப்பதாக கூறப்பட்டதும் இருவரின் பிரிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. கோவிந்தாவிற்கு அத்தை முறை பெண் தான் சுனிதா.

வரலாறு
கோவிந்தா, தாய்மாமா ஆனந்த் சிங் வீட்டில் 3 ஆண்டுகள் தங்கியிருந்தார். அந்த தாய்மாமா ஆனந்த் சிங்கின் மனைவியின் தங்கைதான் சுனிதா. தன்னுடைய அக்கா வீட்டிற்கு சுனிதா வந்தபோது, கோவிந்தாவை முதன்முறையாக சந்தித்திருக்கிறார்.
ஆரம்பத்தில் இருவருக்கும் இடையே நிறைய சண்டகள் வந்ததாகவும் எதிரும் புதிருமாக இருந்தபோது நடனம் தான் இருவரும் இணைத்துள்ளது. நடனக்கலைஞரான கோவிந்தா, சுனிதாவுக்கு நடனம் சொல்லிக் கொடுத்துள்ளார். இப்படியே இருவரும் மாமா முன் நடனமாடினர். காலப்போக்கில் சண்டைகள் குறைந்து, ஒருவருக்கொருவர் நெருக்கமாகினர்.

அப்படியே இருவரும் காதலித்து, இருவீட்டாரும் கடிதங்கள் மூலம் பேசிக்கொள்ள பின் திருமணம் செய்தனர். கோவிந்தாவின் 24 வயதிலும் சுனிதாவின் 18 வயதிலும் திருமணம் செய்து கொண்டனர்.
19 வயதில் முதல் குழந்தை பிறக்க, திருமணம் செய்த விஷயம் வெளியில் தெரிந்தால், தொழிலை பாதிக்கும் என்று கருத்தி அதை மறைத்துவிட்டனர். பல ஆண்டுகள் கழித்து மகிழ்ச்சியாக இரு குழந்தைகளுடன் வாழ்ந்த இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.