கமலுடன் திருமணம் ஆகாமல் வாழ்ந்து வந்த நடிகை கௌதமியின் முன்னாள் கணவரை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க
தமிழ் திரையுலகில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகை கௌதமி. இவருக்கு 1998ஆம் ஆண்டு சந்தீப் என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் முன்னாள் முதல்வர் திரு. ஜெ. ஜெயலலிதா அவரக்ளும் கலந்து கொண்டார்.
ஆனால், திருமணம் நடந்த ஒரே வருடத்தில், தனது கணவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். இந்த தம்பதிக்கு அழகிய ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவர் பெயர் சுபலட்சுமி. விவாகரத்து ஆன சில வருடங்களில் நடிகர் கமல் ஹாசனுடன் ஏற்பட்ட காதலினால், அவருடன் திருமணம் செய்துகொள்ளாமல், காதல் வாழ்க்கை வாழ துவங்கினார் நடிகை கௌதமி.
ஆனால், 13 வருடங்கள் நீடித்த இந்த காதல், 2016ஆம் ஆண்டு முடிவு வந்தது. கமலுடன் இருந்த உறவை முறித்துக்கொண்டார் நடிகை கௌதமி. இந்நிலையில், தனது மகளுடன் தனியாக வாழ்ந்து வரும் நடிகை கௌதமியின் திருமண புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இது பழைய புகைப்படமாக இருந்தாலும், கௌதமின் கணவர் இவர் தான், என்று கூறி ரசிகர்களை இதனை வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..