ஆம்பளைங்கள பிடிக்காதோ.. அசல் கோளாரை அசிங்கப்படுத்திய ஜிபி முத்து..

Bigg Boss GP Muthu
By Edward Oct 21, 2022 07:26 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி பிரபலமான நிகழ்ச்சியான பிக்பாஸ் தற்போது 6வடு சீசனை ஆரம்பித்திருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி தற்போது 12வது நாளை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.

40 நாளில் செய்ய வேண்டியதை இப்போதைய6வது சீசன் போட்டியாளர்கள் 12 நாளில் செய்து வருகிறார்கள் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. அப்படி பெண்களிடன் சேட்டை செய்தும் தடவியும் எல்லைமீறி நடந்து கொள்கிறார் அசல் கோளார்.

மகேஷ்வரி, நிவாஷினி, குயின்ஸி, மைனா நந்தினி, சாந்தி போன்றவர்களுடன் நடந்து கொண்ட செயல் வீடியோவாக இணையத்தில் பரவி வந்தது. நேற்று கூட இலங்கை பெண் ஜனனியை தடவிய புகைப்படமும் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் எப்போது பெண்களுடன் உட்கார்ந்து பேசி வரும் அசல் கோளாரை ஜிபி முத்து வெச்சி செய்துள்ளார். அசலை கூப்பிட்ட ஜிபி முத்து, ஆம்பளைங்கள பிடிக்க மாட்டுதோ, அண்ணன் தம்பின்னு பாசமா வருவீங்க. ஏன் இப்படி மாறிட்டீங்க என்று அசிங்கப்படுத்தியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.