கமல் படத்திற்கு பின் காணாமல் போன குணா ஹீரோயின்!! இப்போ அந்த தொழில் செய்கிறாரா?
தற்போது சமூக வலைத்தளங்களில் குணா திரைப்படம் சென்சேஷனல் டாப்க்காக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் திரும்பிய பக்கம் எல்லாம் கண்மணி அன்போட காதலன் பாடல் உலா வருகின்றது.
இதற்கு காரணம், சமீபத்தில் வெளிவந்த மஞ்சும்மல் பாய்ஸ் என்கிற மலையாள படம் தான். குணா குகையில் நடந்த உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இப்படம் அமைந்து இருக்கும்.
இந்நிலையில் கமல் படத்தில் நடித்த ரோஷினி குறித்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. குணா படத்திற்கு பின் எந்த ஒரு படத்தில் நடிக்காமல் இருந்த ரோஷினி, சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டாராம்.
ரோஷினிக்கு நடிப்பதில் விருப்பம் இல்லாத காரணத்தால் தான் சினிமாவில் இருந்து விலகிவிட்டார் என்று
குணா படத்தின் இயக்குனர் சந்தான பாரதி பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.