குட் பேட் அக்லீ படத்தில் இருந்து விலக இதுதான் காரணமா?.. மேடையில் தேவிஸ்ரீ பிரசாத் ஆவேசம்
குட் பேட் அக்லி
தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் வலம் வரும் அஜித் குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவரது 63 - வது படமான 'குட் பேட் அக்லி' படத்தில் நடித்து வருகிறார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், குட் பேட் அக்லீ படத்தில் இருந்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் விலகி அதற்கு பதிலாக ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இதுதான் காரணமா?
இந்த அறிவிப்புக்கு பின் நேற்று சென்னையில் நடைபெற்ற புஷ்பா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் குறித்து தேவிஸ்ரீ பிரசாத் மேடையில் பேசியுள்ளார்.
அதில், "ரவி சார், நான் சரியான நேரத்தில் இசையமைக்கவில்லை, பாடலை தரவில்லை, சரியான நேரத்திற்கு நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று குறை கூறுகிறீர்கள்.
ஆனால், நான் இன்று நிகழ்ச்சி தொடங்கும் முன் வந்து விட்டேன். நீங்கள் உள்ளே வருவதை படமாக்க வேண்டும் என்பதற்காக என்னை உள்ளே வர விடாமல் 25 நிமிடம் காத்திருக்க வைத்தார்கள். இது என் தவறு இல்லை" என்று மேடையில் கேள்வி எழுப்பினார்.
இவர் குட் பேட் அக்லீ மற்றும் புஷ்பா படத்தின் பின்னணி இசை அமைக்கும் பொறுப்பில் இருந்து விலகி இருக்கும் நிலையில், தற்போது இவர் மேடையில் பேசியுள்ள விஷயம் தயாரிப்பாளர் மற்றும் தேவிஸ்ரீ பிரசாத் இடையில் பிரச்சனை இருப்பதை உறுதி படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.