என்னுடைய முதல் கிரஸ்! அம்மான்னு கூறியே கேள்வியை சமாளித்து பதிலளித்த நடிகை ஹன்சிகா...

maha tamilactress hansikamotwani myfirst
By Jai Aug 20, 2021 12:50 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஹன்சிகா அடுத்தடுத்து இந்தி படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து, சிவகார்த்திகேயன், சூர்யா, விஜய், விஷால், சிம்பு போன்ர முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாகினார்.

இதன்பின் உடல் எடையை ஏற்றியதால் வாய்ப்புகளை இழந்து வந்த ஹன்சிகா மீண்டும் உடல் எடையை படுமோசமாக குறைத்து ஒல்லியாகினார். தற்போது மஹா உள்ளிட்ட சில படங்களில் நடித்தும் யூடியூப் சேனலில் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். தற்போது மெனி ஆப் மை பர்ஸ்ட் என்ற தலைப்பில் தனக்கு முதலாக பிடித்தது, நடித்தது, வேலை, கிரஷ் என பல கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அதில் உங்களில் முதல் செலபிரிட்டி கிரஷ் என்ற கேள்விக்கு நடிகர் பிராட்லி கூப்பர் தனது கிரஷ் என்று கூறியுள்ளார். ஆடிஷன் இல்லாமல் தற்போது வரை சினிமாவில் இருந்து வருகிறாராம். மேலும், முதல் கிரஷ் யார் என்றதற்கு அதை பற்றி கூறவிரும்பவில்லை என்றும். பர்ஸ்ட் ஹார்ட் பிரேக் என்ற கேள்விக்கும் அதே பதிலை கூறி சமாளித்துள்ளார். பெரும்பாலான கேள்விகளுக்கு தன் அம்மாவிற்கு தான் தெரியும் என்றும் கூறியுள்ளார் ஹன்சிகா.