அரண்மனையில் திருமணத்தை முடித்த கையோடு கணவருக்கு போட்ட கண்டீசன்!! நடிகை ஹன்சிகா
தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷுன் மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இந்தியில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்த ஹன்சிகா அதன்பின் தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்து தமிழில் அறிமுகமாகினார்.
சோஹேல்
பின் வேலாயுதம், ஒகே ஒகே, சேட்டை, சிங்கம் 2, வாலு, அரண்மனை, மான்கராத்தே போன்ற ஹிட் படங்களில் நடித்தார். சிம்புவுடன் நடித்த போது அவருடன் காதலில் இருந்து பின் கருத்து வேறுபாட்டால் பிரிந்தார். தற்போது 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, தனது 31 வயதில் சோஹேல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
சோஹேல் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியின் கணவர் என்றும் பின் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துள்ளனர். அதன்பின் தான் ஹன்சிகாவை காதலித்து வந்துள்ளார் சோஹேல். கடந்த 4 ஆம் தேதி ராஜஸ்தானில் அமைந்திருக்கும் பிரம்மாண்ட அரண்மனையில் கோடிக்கணக்கில் செலவு செய்து திருமணம் செய்துள்ளனர்.

ஹனிமூன்
தொழிலதிபரை திருமணம் செய்த கையோடு இன்று மாலை மும்பை விமான நிலையத்திற்கு ஜோடியாக கைக்கோர்த்த படி வந்துள்ளனர். அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் ஹன்சிகாவிடம், ஹனிமூன் என்கே என்று கேள்வி கேட்டனர். அதற்கு ஷாக்காகி எந்த பதிலும் கூறாமல் சிரித்தபடி சென்றுள்ளார்.
இந்நிலையில் ஹன்சிகா திருமணமான கையோடு ஹனிமூனுக்கு நோ சொல்லிவிட்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளாராம். அடுத்தடுத்த படங்களை கையில் வைத்திருக்கும் ஹன்சிகா ஷூட்டிங் முடிந்தப்பின் தான் ஹனிமூன் செல்லவுள்ளாராம்.