மனைவியை பிரிந்து 29 வயது பாடகியுடன் ரகசிய டேட்டிங்!! வைரலாகும் ஹர்திக் பாண்டியா புகைப்படங்கள்..
இந்தியாவின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, பிரபல நடிகை நடாஷாவை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு அகஸ்தியா அழகான குழந்தை இருக்கிறது. அண்மையில் இந்த தம்பதி சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். இருவரும் அதிகாரப்பூர்வமாக தங்களது சோசியல்மீடியா பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.
தன் மனைவிக்கு ஜீவனாவம்சமாக ஹர்திக் பாண்டியா தன்னுடைய சொத்து 70 சதவீதம் நடாசாவுக்கு கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. பிரிவை அறிவித்த அடுத்த நாளே தன் மகனுடன் நடாசா தன் சொந்த ஊருக்கு பறந்து அங்கு தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதற்கிடையில் நடாசா வேறொருவருடன் காதலில் இருக்கிறார் என்று கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா பற்றிய ஒரு ரகசியம் லீக்காகியிருக்கிறது. அதாவது பிரிட்டிஷ் பாடகியான ஜாஸ்மின் வாலியா என்பவருடன் ரகசியமாக ஹர்திக் பாண்டியா டேட்டிங் செய்து வருகிறார் என்றும் இருவரும் ஒரே நேரத்தில் மைக்கோனோஸ் என்ற தீவிற்கு அவுட்டிங் சென்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில், ஜாஸ்மின் மற்றும் ஹர்திக் இருவரும் நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளதை வைத்து இருவரும் ஒன்றாக தான் இருக்கிறார்கள் என்று செய்திகள் பரவி வருகிறது குறிப்பிடத்தக்கது.[


