மும்பை இந்தியன்ஸில் அடுத்த சர்ச்சை!! வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்த ஹர்திக் பாண்டியா..
மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் 2026 தொடரில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து நடப்பு தொடரில் இருந்து வெளியேறும் நிலையில் மும்பை இந்தியன்ஸ் இருந்து வருகிறது. அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கடந்த சில போட்டிகளில் காயம் காரணமாக விளையாடவில்லை.

இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் மகிளா ஜெயவர்தனே, ஹர்திக் பாண்டியாவிற்கு முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்று கூறினார்.
மேலும் கடந்த சில நாட்களாகவே அவரால் எவ்வித பயிற்சியிலும் ஈடுபட முடியவில்லை, காயம் காரணமாக களமிறங்கவில்லை என்று கூறியிருந்தார்.

ஆனால் இப்படி அவர் கூறிய சில மணி நேரங்களில், ஹர்திக் பாண்டியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பயிற்சி செய்யும் இரு வீடியோகளை ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
11 போட்டிகளில் 8 போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில் அடுத்த போட்டிக்காக மும்பை இந்தியன்ஸ் அனி வீரர்கள் அனைவரும் தரம்சாலாவிற்கு புறப்பட, ஹர்திக் பாண்டியா மட்டும் செல்லவில்லை.
அவருக்கு பதில் இந்த போட்டியிலும் சூர்ய குமார் யாதவ் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது. காயம் தான் காரணமா அல்லது நிர்வாகத்துடன் ஏதேனும் பிரச்சனையால் விலகி இருக்கிறாரா? ஹர்திக் என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.