தீபிகாவின் கவர்ச்சி காவி பிகினியால் சர்ச்சை!! ஹாருக்கான் படத்திற்கு வந்த புதுபிரச்சனை...

Shah Rukh Khan Gossip Today Bollywood Deepika Padukone
By Edward Dec 13, 2022 08:25 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை தீபிகா படுகோன். முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் ஹாலிவுட் நடிகையாகவும் திகழ்ந்து வருகிறார்.

சமீபத்தில் தான் காதலித்து வந்த நடிகர் ரன்வீர் சிங்கை 2018ல் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னும் படங்களில் நடித்து வரும் தீபிகா தற்போது கிளாமரில் உச்சக்கட்ட நடிப்பை காட்டி வருகிறார். அந்தவகையில் பாலிவுட் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் ஷாருக்கானுடன் பதான் படத்தில் நடித்துள்ளார். அப்படத்தின் Besharam Rang என்ற பாடல் இன்று வெளியானது.

அப்பாடலில் தீபிகா படுகோனே பிகினி ஆடையணிந்து கிளாமர் லுக்கில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருமணமான 4 வருடத்திற்கு பின்னும் இப்படியொரு கிளாமரா என்று ரசிகர்கள் வாய்ப்பிளந்து வரும் சமயத்தில் பதான் படத்தில் புதிய பிரச்சனை வந்துள்ளது.

அதாவது தீபிகா படுகோன் காவி பிகினி ஆடையணிந்தும் ஷாருக்கான் பச்சைநிற ஆடையணிந்து கவர்ச்சியாக அணிந்தது இந்து சமயத்தை அவமானப்படுத்துவதாக சிலர் புகாரளித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் #pathaanboycott என்ற ஹாஷ்டேக்கினை பகிர்ந்து எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery