விவாகரத்து பெற்று பிரிந்த கமல் - சரிதா!! ஒரு பைசா வாங்காமல் தனியாக வாழ்ந்து வரும் மகள் ஸ்ருதி..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் மகளாக பின்னணி பாடகியாக அறிமுகமாகி 7 ஆம் அறிவு, 3 போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன். முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்த ஸ்ருதி ஹாசன் பாலிவுட் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்து கொடிக்கட்டி பறந்து வருகிறார்.
சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை படைத்து வரும் சலார் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், பெற்றோர்கள் பிரிவு குறித்தும் சகோதரி குறித்தும் பகிர்ந்துள்ளார்.
என் பெற்றோரின் பிரிவு என்னையும் என் தங்கை அக்ஷராவையும் கடுமையாக பாதித்ததாக்வும் அக்ஷரா சிறியவளாக இருந்ததால் அவளுக்கு அவர்களின் பிரிவு கடினமானதாக இருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால் அவர்கள் இன்று மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இருவரையும் தனித்த இயல்புடையவர்களாகவே சிறியவயதில் இருந்து தான் பார்த்ததாகவும் அவர்கள் என் பெற்றோர்கள் மட்டுமல்ல நல்ல மனிதர்கள் என்று தெரிவித்தார்.
என் பெற்றோர்கள் பிரபலங்கள் என்பதால் எனக்கு வாய்ப்புகள் கிடைத்ததை நான் மறுப்பதற்கில்லை என்றும் அவர்களின் உதவியையோ, பெயரையோ நான் பயன்படுத்தியதில்லை என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

திருமணமாகி குழந்தை இருக்கும் போது இசையமைப்பாளருடன் கள்ளத்தொடர்பு!! நடிகர் பாலா மனைவியின் ரகசியத்தை உடைத்த நண்பர்...
நான் மிகவும் கடினமான காலத்தை கடந்திருக்கிறேன், அப்போது 21 வயதில் இருந்து பெற்றோரிடம் இருந்து ஒரு பைசா கூட நான் வாங்கியதில்லை என்று தெரிவித்திருக்கிறார் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது ஸ்ருதி ஹாசன் சாந்தனு என்பவருடன் லிவ்விங் டூ கெதர் வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video