3வது முறையாக காதலில் விழுந்த வாரிசு நடிகை! பாய்பிரண்டை கழட்டிவிட்டு பிளேபாயுடன் ஊர்சுற்றும் நிலை
பாலிவுட்டின் முன்னணி நடிகராகவும் பாலிவுட் தம்பதிகளாக இந்தி படங்களில் ஜோடியாக நடித்து திருமணம் செய்தவர்களின் மகள் தான் அந்த அம்மணி. 21 வயதில் வாரிசு நடிகையாக அறிமுகமானி அந்த நடிகை ஆரம்பத்திலேயே க்ளாமரில் பெரியளவிற்கு தாராளம் காட்டி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க தற்போது அசுரனுடனும் பாலிவுட் முன்னணி நடிகரும் சேர்ந்து நடிக்கும் படத்தில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், ஏற்கனவே இரு நடிகருடன் லிவ்விங்டு கெதரில் இருந்து ஜாலியாக இருந்த நடிகை தற்போது இரண்டாவது பாய்பிரண்ட்டை சமீபத்தில் கழட்டி விட்டிருக்கிறார். அக்கட தேசத்தில் ப்ளேபாய் நடிகராக வலம் வருபவருடன் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம். ஆரம்பத்தில் தான் உண்டு தன் படப்பிடிப்பு உண்டு என்று என இருந்த அந்த நடிகை கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடிகரிடம் உங்கள் ரசிகை என அறிமுகப்படுத்திக் கொண்டாராம்.
சில நாட்கள் அவருடன் பழகி பார்த்தவுடன் நம்முடைய அடுத்த காதலர் இவர்தான் என முடிவு செய்து கொஞ்சம் நெருங்கி பழக ஆரம்பித்தாராம். இணையத்தில் மிகவும் நெருக்கமாக படுத்தபடி செல்ஃபி புகைப்படத்தை வெளியிடும் அளவிற்கு தைரியம் வந்துள்ளது அம்மணிக்கு. இருவரும் சாப்பாடு ஊட்டிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கி விட்டதாம். அதனைத் தொடர்ந்து அந்த நடிகை சமீபத்தில் அந்த நடிகரின் மேல் படுத்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி கேட்டதற்கு அந்த நடிகரின் தீவிர ரசிகை நான் என பதில் கூறியிருந்தார் அந்த நடிகை. ஆனால் அந்த புகைப்படமே எக்குதப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த நடிகரும் சும்மா சொல்லக்கூடாது. அக்கட தேசத்தில் பிளேபாய் நடிகர்தான். தற்போது மேற்கே செல்ல ஆசைப்பட்டு அங்கே உள்ள வாரிசு நடிகையை உஷார் செய்துள்ள விஷயம் அவருடைய பழைய காதலிகளை கோபப்படுத்தி உள்ளதாம்.