மூன்று நடிகைகள் பத்தாதா? டான்சர் ஹேமா தயாலையும் விட்டுவைக்காத தனுஷ். ஒருவேல இருக்குமோ..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த தனுஷ் கடந்த ஜனவரி மாதம் 18 வருட திருமண வாழ்க்கையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக அறிவித்தார். விவாகரத்துக்கு பின் அவர் நடிப்பில் வெளியான மாறன் படமும் தோல்வியை தழுவியது.
தற்போது அவர் நடிப்பில் திருச்சிற்றம்பலம், தி கிரே மேன் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் வாத்தி, நானே வருவேன் மற்றும் கேப்டன் மில்லர் என்ற படத்திலும் நடித்து வருகிறார். தனுஷ் பாடல்கள் என்றாலே சாதனை படைக்கும் அளவிற்கு மிகப்பெரியளவில் வைரலாகும்.
அதிலும் தனுஷ் - அனிருத் கூட்டணியில் பல பாடல்கள் மிகப்பெரியளவில் வெற்றிப்பெற்று சாதனையை பெறும். ஆனால் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் தாய் கிழவி பாடல் வெளியாகி சுமாரான வரவேற்பை மட்டுமே ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
இந்நிலையில் இப்பாடலில் வரும் துணை பெண் நடன கலைஞர் ஹேமா தயால் ஆட்டம் போட்டது ரசிகர்கள் கவனத்திற்கு வந்துள்ளது. மாறி படத்தில் தர லோக்கல், ஜகமே தந்திரம் படத்தில் ரகிட ரகிட படத்தில் ஆடி அனைவரது கவனத்தை ஈர்த்தவர் தான் அந்த பெண் நடன கலைஞர்.
இந்த பாடலிலும் நடனமாடியிருப்பதை வைத்து மீம் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே மூன்று நடிகைகள் படத்தில் நடித்துள்ள நிலையில் நடிகைகளை விட இந்த நடன இயக்குனர் தான் கவனத்தினை ஈர்த்துள்ளார்.
