மாராவை தொடர்ந்து கலியுகத்தை ஆரம்பிக்கும் நடிகை.. 2050 க்கே செல்லும் இயக்குநர்..

tamil actor cine
By Jon Jan 22, 2021 06:07 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு முதல் இரண்டு படங்கள் கைக்கொடுக்காமல் போகும். ஒருசிலருக்கு கதைக்களம் நன்றாக இருந்து பேசப்படுவார்கள். அந்தவகையில் தமிழில் காற்று வெளியிடை படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

இதையடுத்து பெரியளவிற்கு அவரை கொண்டு சென்ற படம் நடிகர் மாதவனின் விக்ரம் வேதா திரைப்படம். சமீபத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக மாரா படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். இந்நிலையில், இந்த ஆண்டு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத், கலியுகம் என்ற படத்தின் பூஜை சமீபத்தில் துவங்கியுள்ளார்கள்.

தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்பட்டும் கலியுகம் படத்தை இயக்குநர் பிரமோத் ஷங்கர் இயக்கியவிருக்கிறார். ஹாரர் திரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படம், கலியுகத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? கலியுக முடிவில் பூமி மிஞ்சி இருக்குமா? இருக்காதா? என்பதையெல்லாம் சுட்டிக்காட்டும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்பட இருக்கிறது.

அதோடு, 2050 ஆம் ஆண்டு காலகட்டத்தில் இந்த உலகம் எப்படியிருக்கும் என்பது போன்று செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு உருவாக்கவுள்ளார்களாம்.


GalleryGallery