வேதாளம் அஜித்தையே அட்டர் காப்பி அடித்த பாலிவுட் நடிகர்! வைரலாகும் வீடியோ..

Ajith Kumar Sivakumar
By Edward May 28, 2022 12:18 PM GMT
Edward

Edward

Report

உச்ச நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகர் அஜித் நடிப்பில் ஏகே61 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இயக்குமர் எச் வினோத்துடன் வலிமை படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்திருக்கிறார் நடிகர் அஜித்குமார்.

இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை, விசுவாசம் படங்களை தவிர்த்து சமீபகாலங்களில் வெளியான படம் எதுவும் கதை அம்சம் சிறப்பாக அமையாமல் தோல்வியை சந்தித்ததோடு கடுமையான விமர்சனத்தையும் பெற்றது.

அப்படி இயக்குனர் சிவா இயக்கத்தில் 2015ல் அஜித் நடிப்பில் வெளியான படம் வேதாளம். இப்படத்தில் தங்கையை காப்பாற்ற அஜித் முகபாவனைகளை மாற்றி மாற்றி நடித்திருக்கும் ஒரு காட்சி அமைந்திருக்கும். இந்த காட்சியை ஒரு பாலிவுட் படத்தில் முழுமையாக காப்பி அடித்திருக்கிறார்கள்.

Heropanti 2 என்ற படத்தில் நடிகை டைகர் ஸ்ரோஃப் நடிப்பில் இயக்குனர் அகமது கான் இயக்கியிருப்பார். இப்படத்தில் தான் அந்த காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான இப்படம் 70 கோடி வசூலித்துள்ளது. தற்போது இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே பீஸ்ட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகளை வட இந்திய ரசிகர்கள் கலாய்த்து வந்த நிலையில் அவர்களுக்கு உதவும் படியாக அஜித் ரசிகர்கள் இந்த வீடியோவை வெளியிட்டு அவர்களை கிண்டல் செய்து விஜய் ரசிகர்களுக்கு உதவியுள்ளனர்.