இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை.. ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி
சினிமாவில் லட்சம், கோடிகளில் சம்பளம் பெரும் நடிகைகளை கண்டிருப்போம் அவ்வளவு ஏன் ஒரே ஒரு விளம்பரத்திற்காகக் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டும் நடிகைகளும் உள்ளனர்.
ஆனால் சீரியல் நடிகை ஒருவர் ஒரு நாளைக்கு லட்சத்தில் சம்பளம் பெறுகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், அந்த நடிகை வேறு யாரும் இல்லை, இன்ஸ்டாவில் 50 மில்லியன் பின்தொடர்பாளர்களைக் கொண்ட நடிகை ஜன்னத் ஜுபைர் ரஹ்மானி தான்.
வெறும் 23 வயதான இவர் ஒரு நாளுக்கு ரூ. 18 லட்சம் சம்பளமாக பெறுகிறார். பாலிவுட் நடிகையாக தற்போது வலம் வரும் இவர் முதலில் பாலிவுட்டில் சீரியல் நடிகையாக பலரின் கவனத்தை பெற்று படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஒரு எபிசோடுக்கு இவ்வளவா?
தற்போது பெரும்பாலும் சீரியல்களில் சிறப்பு தோற்றங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த ஆஷிகி, ஆப் கே ஆ ஜனே சே தொடர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், சீரியலில் ஒரு எபிசோடுக்கு ரூ. 18 லட்சம் வரை சம்பளம் பெரும் ஜன்னத் தான் இந்தியாவின் அதிக சம்பளம் பெறும் சீரியல் நடிகை என்று கூறப்படுகிறது.