ஹிட்லர் - அஜித்தின் வலிமை! படத்திற்கு இப்படியொரு தொடர்பா! Satans Slaves வைத்த கதைகளம் தானா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். விசுவாசன், நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை படங்களை இயக்கு எச் வினோத்துடன் மறுபடியும் இணைந்தார். வலிமை என பெயரிடப்பட்ட இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வர்வேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் பைக் ரேசர்களை முன்வைத்த படமாக உருவாகியுள்ளது.

வீடியோவின் ஆரம்பத்தில் வலிமை அளவற்ற வலிமை - இதுவே இப்போதைய தேவை என்ற வசனம் எழுத்து வடிவில் இருக்கும். இதைதொடர்ந்து பின்னணி குரலில் ஒருசில வரிகள் வாசிக்கப்படும். “நீங்கள் கடைத்தெடுத்த விஷம் நாங்கள் சாத்தானின் அடிமைகள் நாங்கள், இருள் மலைதான் எங்கள் உலகு அதில் அத்துமீறி கால் வைத்தால்” என்று கூறப்பட்டு இருக்கும். பின் அஜித்தின் காலடியை காட்டுவார்கள்.

அந்த வசனம் என்ன வென்று பலர் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இயக்குநர் எச் வினோத் இதை எப்படி கதை களத்தினை எடுத்துள்ளார் என்ற சில விடங்கள் தெரியவந்துள்ளது. சாத்தானின் அடிமைகள் என்ற வசனம் சர்வதேச அளவில் இருக்கும் பை ரைடர்களின் பின்புலத்தை வைத்து தான் இந்த கதை உருவாகியுள்ளதாம். கையில் மூட்டை முடிச்சுகளை வைத்து கொண்டு வரும் பைக் ரைடர்கள் இல்லாமல் ஹிட்லருடைய அடிக்குடிக்கலாக இருந்த Satans Slaves என்பவர்களை வைத்து தான் வலிமை எடுக்கப்பட்டுள்ளதாம்.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ரஷ்யா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் பெரும்பாலும் காணப்படுபவர்கள். கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துப்பாக்கிகளை வைத்துக்கொள்வது என குற்றச்செயல்களில் ஈடுபவர்கள் தான் இவர்களாம். போதை பொருள் கலாச்சாரத்திற்கு இடையிலும் இவர்கள் ஈடுபவர்களாம். ஹிட்லரின் கருத்தான நாசி சிம்பிள்களை கடைப்பிடிப்பவர்களாம் Satans Slaves.

ஜார்ஸ் ரிச்சி என்பவர் பிரபல Satans குழுவின் தலைவராக இருப்பவர். குழந்தைகளை வண்புறவு செய்த வழக்கில் ஈடுபட்டவர்களாம். பல குழுக்கள் இருக்கும் நிலையில் இதுபோன்ற ஒருசில கேங்க் குழுக்களை வைத்துதான் வலிமை படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Gallery Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்