நேற்று திடீரென மயக்கம் போட்டு விழுந்த சண்முக பாண்டியன் தற்போதை நிலை என்ன?

Vijayakanth Tamil Cinema
By Yathrika Aug 26, 2024 08:30 AM GMT
Report

விஜயகாந்த்

நேற்று ஆகஸ்ட் 25, தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர் விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்.

கேப்டன் விஜயகாந்த் என ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கடந்த வருடம் கோடான கோடி ரசிகர்களை விட்டு இந்த உலகை விட்டு மறைந்தார். 

அவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. 

விஜயகாந்த் அவர்களின் 72வது பிறந்தநாள் நேற்று கோலாகலமாக அவரது உருவ சிலை திறக்கப்பட்டு கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வின் போது விஜயகாந்த் இளைய மகன் திடீரென மயக்கம் அடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

தற்போது அவர் தீவிர சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தகவல் வந்துள்ளது. 

நேற்று திடீரென மயக்கம் போட்டு விழுந்த சண்முக பாண்டியன் தற்போதை நிலை என்ன? | Hospitalised Shanmuga Pandian Current Situation