காதல் நாயகனே, தொகுப்பாளினி டிடி யாரை கூறுகிறார்? வைரலாகும் வீடியோ
திவ்யதர்ஷினி
தமிழ் சின்னத்திரையில் டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. 20 வருடங்களுக்கும் மேலாக டாப் தொகுப்பாளினியாக வலம் வந்தவர் கடந்த சில வருடங்களாக தனது உடல்நலக் குறைவால் தொலைக்காட்சி பக்கம் வராமல் இருந்தார்.
ஆனால் சமீப காலமாக அவர் விருது விழாக்கள், பட விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். அவ்வப்போது வெளிநாடு செல்வது என வலம் வரும் டிடி தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இன்ஸ்டாவில் 2.7 மில்லியன் ரசிகர்கள் வைத்திருக்கும் திவ்யதர்ஷினி. அவ்வப்போது அவருடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது அவர் வெளிநாட்டில் எடுத்த கியூட் வீடியோ ஒன்றை பதிவிட்டு அதற்கு காதல் நாயகனே என்று ஒரு பாடலை போட்டுள்ளார். அவர் பதிவிட்ட இந்த பாடலுக்கு ரசிகர்கள் பலர் அந்த பாடல் யாருக்காக என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.