பூமிக்குத் திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்!! சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுமார் 286 நாட்களுக்கு பின் பூமித்திருப்பவுள்ளார் சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு நாள் பயணமாக கடந்த 2024 ஜூன் 5 ஆம் தேதி சென்று அங்கு எதிர்பாராத நிகழ்வுகளால் அங்கேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இன்று ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஹோக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் போர்புனோவ் ஆகியோர் பூமி திரும்ப தயாராகும் வீடியோவை நாசா வெளியிட்டது. அதற்கு முன் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்களுடன் பணிபுரிந்த மற்றும் புதிதாக இணைந்துள்ள வீரர்களுக்கு அவர்கள் விடை கொடுத்தனர்.
சம்பளம்
17 மணி நேர பயணத்தினை சுனிமா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 பேருடன் அந்த விண்கலம் நாளை 19 ஆம் தேதி அதிகாலை 3.27 மணிக்கு பூமி வந்ததடையும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சுனிதா வில்லியம்ஸின் அமெரிக்க அரசாங்கத்தின் தரநிலைப்படி நாசாவிலும் சம்பளம் வழங்கப்படுகிறது.
இதில் விண்வெளி வீரர்களுக்கான சிவிலியன் ஆஸ்ட்ரோநட்ஸ் GS-13 மற்றும் GS-15 தர ஊதியமும் வழங்கப்படும். அமெரிக்காவில் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் GS-01 முதல் GS-15 வரையிலான தர ஊதியத்தின் படி சம்பளம் வழங்கப்படுகிறது. GS-15 தர ஊதியம் என்பது இங்கு மிக அதிகமான சம்பளம்.
287 நாட்கள்
அந்தவகையில் GS-13 பிரிவில் ஆண்டுக்கு 81,216 முதல் ரூ. 1,05,579 அமெரிக்க டாலர் வரை. இந்திய மதிப்பில் ரூ.70 லட்சம் முதல் 92 லட்சம் வரை. GS-14 பிரிவில் ஆண்டுக்கு 95,973 முதல் 124,764 அமெரிக்க டாலர் வரை.
இந்திய மதிப்பில் ரூ. 83 லட்சம் முதல் ரூ. ஒரு கோடியே 8 லட்சம் வரை. GS-15 பிரிவில் 112,890 முதல் 146,757 அமெரிக்க டாலர் வரை. இந்திய மதிப்பில் ரூ.98 லட்சம் முதல் ஒரு கோடியே 27 லட்சம் வரை சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
தற்போது 287 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸிற்கு ஒரு நாளுக்கு தலா 4 டாலர்கள் வீதம் 1148 டாலர்கள் (ரூ.1 லட்சம்) சம்பளமாக தரப்படுகிறதாம். பூமி திரும்பும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரின் ஆண்டு சம்பளம் 1.08 கோடி ரூபாய் முதல் 1.41 கோடி ரூபாய் வரை இருக்கும்.