பெத்தி பட சர்ச்சை..எனக்கு பங்கு இருக்கு!! ஜான்வி கபூர் ஓபன் டாக்..
ஜான்வி கபூர்
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகளான ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார். அதன்பின் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் நடித்து வந்த ஜான்வி, தேவரா, பெட்டி என தெலுங்கு படங்களில் நடித்தார். இதனையடுத்து பெட்டி படத்தில் ஜான்வி கபூரை மோசமாக காட்சிப்படுத்துவது குறித்து விமர்சனங்கள் எழுந்து வந்தது.
இதற்கு பல பிரபலங்கள் படக்குழுவினருக்கு எதிரான கருத்துக்களை கூறி வந்தனர். இந்நிலையில் பாலிவுட் பிரபலம் கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜான்வி கபூர், பெத்தி பட சர்ச்சை குறித்து பேசியுள்ளார்.

பெத்தி பட சர்ச்சை
அதில், இந்த விவகாரம் குறித்து நான் பல விஷயங்களை உணர்ந்தேன். இதுபற்றி பேசுவதற்கு நான் தயங்கியதற்கான காரணம். அப்படத்திற்காக பலரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இதைப்பற்றி நான் என்ன சொல்வது, உண்மையில் சொல்வதற்கு ஏதாவது இருக்கிறதா என்பதுகூட எனக்கு தெரியவில்லை. இந்த சர்ச்சையில் எனக்கும் ஒரு பங்கிருப்பதால், அதற்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் இதுபோன்ற கதைக்களம் நம்முடைய சமூகத்தில், குறிப்பாக பெண்கள் தொடர்பாக ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கம் என் மனசாட்டியை உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது.

அந்த வகையில், பெண்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து குற்றவுணர்வை நான் எப்போதும் சுமந்து கொண்டிருப்பேன். நான் இன்னும் அதிகமாக செய்லபட்டு இருக்க முடியுமா? விழுப்புடன் இருந்திக்க முடியுமா? இப்பிரச்சனையை இன்னும் பெரிதாக எழுப்பி இருக்க முடியுமா? நிச்சயமாக 100 சதவீதம் என்னால் முடிந்திருக்கும். அந்த சித்தரிப்பு சிக்கலானதாக இருந்ததா? பெண்களை மிகையாகப் பாலியல் ரீதியில் பண்டமாக சித்தரித்ததா? பாலியல் வன்கொடுமையை ஒரு கதையாடலின் வழியாக இயல்பானதாக காட்டியதா? ஆம், ஆனால் இனிமேல் இதுபோல ஒன்று மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்வது தான் என்னால் செய்ய முடிந்த ஒரே விஷயம்.

எனக்கு பங்கு
மற்றவர்கள் மீது பழிசுமத்த விரும்பவில்லை. இயக்குநர் என்ன சொல்கிறாரோ, அதை நடிகை செய்ய வேண்டும், நடிகையின் ந்லை என்ன என்று உங்களுக்கு தெரியும். தொழில்முறையாக நடந்து கொள்ள வேண்டும். இயக்குநரின் அறிவுறுத்தல்களை கேட்டு நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அதேபோல், ஒருகாட்சி இறுதியாக திரையில் எப்படித்தோன்றும் என்பதற்கான முழுமையான வடிவத்தை திரைக்கதைகள் எப்போதும் வழங்குவதில்லை.
குறிப்பாக ஷூட்டிங்கின்போது பயன்படுத்தப்படும் கேமரா கோணங்கள் போன்ற விவரங்கள் திரைக்கதையில் இடம்பெறுவது மிகவும் அரிது. எனவே எனக்கு தெரியவரும் தகவல்களின் படி அந்த காட்சிகள் ஏபடுத்தக்கூடிய சிக்கல்களை குறைப்பதற்கு என்னாஇ முடிந்த முடிந்த முயற்சிகளை மேற்கொண்டேன். அப்படி இருந்தும் இந்த விவகாரத்தில் எனக்கான பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

நான் சில சலுகைகள் கிடைக்கூடிய ஒரு பின்னணியிலிருந்து வருகிறேன். அந்த செல்வாக்கை நான் பயன்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் நான் சலுகைகள் பெற்ற பின்னணியிலிருந்து வருகிறேன் என்பதற்காக எப்படியும் என்னை விமர்சிக்கத்தான் போகிறார்கள். அப்படி இருக்கும்போது அந்த செல்வாக்கை பயன்படுத்தி இப்பிரச்சனையை இன்னும் வலுவாக எதிர்கொண்டிருக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார் ஜான்வி கபூர்.