என் கல்யாணம் எப்போ நடந்தா மத்தவங்களுக்கு ஏன் அக்கறை!! நடிகை அஞ்சலி..
அஞ்சலி
அங்காடி தெரு, கற்றது தமிழ், எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி, பலூன், நாடோடிகள் 2, நிசப்தம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை அஞ்சலி. மகுடம் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

நிவின் பாலி நடித்துள்ள இப்படத்தின் நிகழ்ச்சிகளில் அஞ்சலி கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் அஞ்சலி அளித்த பேட்டியில் தன்னுடைய திருமணம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
என் கல்யாணம் எப்போ
அதில், தன்னை நேரில் சந்திக்கும் பலரும் முதலில், எப்போது கல்யாணம் என்று கேட்கிறார்கள். என் கல்யாணத்தை நான் எப்போது வேண்டுமானாலும் பண்ணிப்பேன், அதில் மற்றவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்று எனக்கு புரியவில்லை.

கல்யாணம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் கிடையாது, கல்யாணத்திற்குப் பின்னால் ஒரு பெண்ணின் வாழ்க்கையே மாறுகிறது. பல விஷயங்களை அவள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. இப்படி பல சிரமங்களும் பொறுப்புகளும் இருக்கும்போது, எதற்காக திரும்பத்திரும்ப இந்த ஒரே கேள்வியை கேட்கிறீர்கள் என்று தெரிவித்தார்.
மேலும், தன் திருமணம் எப்படி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார்.
எனக்கு எப்போது திருமணம் நடந்தாலும், மனதார வாழ்த்தும் சிலர் இருந்தாலே போதும். நான் நல்லா இருக்க வேண்டும் என்று மனதரா வாழ்த்துகிற நாலு பேரோ, 40 பேரோ இருந்தாலே போதும். அவர்கள் மட்டும் என் கல்யாணத்திற்கு வந்து மனதார வாழ்த்தினால் போதும். ஆடம்பரமான கூட்டம் எனக்கு தேவையில்லை என்று வெளிப்படையாக பேசியிருக்கிறார்.