இதுக்குதான் விவாகரத்து வாங்குனீங்களா ஐஸ்வர்யா.. நடிகைகளை அந்த விஷயத்தில் ஓரங்கட்டிய தனுஷின் முன்னாள் மனைவி

divorce dhanush aishwarya rajinikanth
By Kathick Apr 08, 2022 01:10 PM GMT
Report

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விவாகரத்து பின் மீண்டும் இருவரும் இணைவார்கள் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஐஸ்வர்யா தொடர்ந்து நடந்து வரும் சில விஷயங்களை பார்த்தால், அது சாத்தியமில்லை என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

விவாகரத்து பின் தங்களது பிள்ளைகளுடன் நேரத்தை இருவரும் அவ்வப்போது செலவழித்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட, தனது இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படத்தை ஐஸ்வர்யா வெளியிட்டு இருந்தார். இதுமட்டுமின்றி விவாகரத்து ஆன பிறகு, தொடர்ந்து ஒர்கவுட் செய்து வரும் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் ஐஸ்வர்யா.

அந்த வரிசையில் தற்போது ஜிம் உடையில், வெறித்தனமாக ஒர்கவுட் செய்யும் வீடியோவை பதிவு செய்துள்ளார் ஐஸ்வர்யா. இப்படி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்யாதான் தனுஷிடம் இருந்து விவகாரத்தை பெற்று கொண்டீர்களா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு இருக்கும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.