எனக்கு இன்னொருத்தி செட் ஆகமாட்டானு..!! விஜய்யிடம் மனைவி சங்கீதா சொன்ன அந்த வார்த்தை..
லண்டனில் படித்து சென்னையில் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட சங்கீதா விஜய், லண்டன் வாழ் இலங்கை தமிழரான தொழிலதிபர் சொர்ணலிங்கம் என்பவரின் மகள் தான். சங்கீதாவிற்கு ஒரு அக்கா இருக்கும் நிலையில் விஜய்யை காதலித்து திருமணம் செய்து இரு குழந்தைகளை பெற்று சென்னையில் செட்டிலாகினார்.
திருமணமாகி 25 ஆண்டுகளாகிய நிலையில் விஜய்யை பிரிந்து வாழ்வதாக செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில் விஜய் தனது மனைவி குறித்து சில ஆண்டுகளுக்கு முன் சொன்ன வீடியோ தற்பொது ட்ரெண்ட்டாகி வருகிறது.
மனைவி சங்கீதா
அதில், என் அம்மாவுக்கு ஒரு ரசிகை கடிதம் எழுதி இருந்தார். உங்களுடன் சேர்ந்து உங்கள் வீட்டு கிச்சனில் சமைக்க வேண்டும் என்று ஆசை என்று சொல்லி இருந்தார். அது வேறு யாரும் இல்லை என் மனைவி சங்கீதா தான். அதேபோல் எனக்கு நிறைய ரசிகைகள் மெயில், லட்டர் போடுவதாக மிரட்டிருக்கிறேன்.
ஆனால் எனக்கு வேறு யாரும் செட்டாகமாட்டாங்க என்று சங்கீதாவுக்கு தெரியும். அந்த நம்பிக்கை நிறையவே அவரிடம் இருக்கிறது. அதனால் அவரைப்பொறுத்தவரை அந்த பயம் எல்லாம் இல்லை என்று ஜாலியாக விஜய் கூறியிருக்கிறார்.