ஒரு பைசா கூட வாங்கவில்லை.. இளையராஜா செய்த தரமான சம்பவம்.. இணையத்தில் வைரல்
Ilayaraaja
By Karthick Raja
இசைஞானி இளையராஜா குறித்த செய்திகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு முன்பு இளையராஜா செய்த ஒரு விஷயம் தற்போது உலா வருகிறது. அதைப்பற்றி பார்க்கலாம் வாங்க.

அப்போதைய காலகட்டத்தில் புதிதாக அறிமுகமாகும் இயக்குநர்களின் படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் அது ஹிட் என்ற சென்டிமென்ட் இயக்குநர்கள் மத்தியில் இருந்து வந்தது.

அப்போது அறிமுக இயக்குநர்களாக தாங்கள் இயக்கிய படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்று தன்னிடம் வந்த பி.வாசு, பிரதாப் போத்தன், மணிவண்ணன், சங்கிலி முருகன் போன்றவர்களிடம் ஒரு பைசா கூட காசு வாங்காமல், அவர்களின் முதல் படத்திற்கு இலவசமாக இசையமைத்து கொடுத்தாராம் இளையராஜா.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.