பிரபல நடிகரின் மனைவியிடம் மோசமாக நடந்துகொண்ட இளையராஜா.. தலைக்கனத்தின் உச்சம்

Shankar Rohini Ilayaraaja
By Kathick Jun 24, 2022 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இசைஞானி என்று அழைக்கப்படுபவர் இளையராஜா. இவருடைய இசையில் வெளிவந்த பல லட்சம் பாடல்கள் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது. பாடல்களின் மூலம் நம்மை கவர்ந்த இளையராஜா, தன்னுடைய செயலின் மூலம் நம் மனதில் இடத்தை பிடிக்க தவறிவிட்டார்.

ஆம், பல இடங்களில் தனது தலைக்கனத்தினால் தவறான விஷயங்களையும், தான் மட்டும் தான் பெரிய ஆள் என்றும் நினைத்துக்கொண்டு இளையராஜா செய்த விஷயங்கள் பலரின் மனதை புண்படுத்தியுள்ளது. அப்படி ஒரு முறை நடிகை ரோஹிணியிடம் இளையராஜா நடந்துகொண்டது பலருக்கும் வேதனையை கொடுத்தது.

ஆம், ஒரு மேடையில் ஷங்கருடன் இணைந்து எப்போது நீங்கள் படம் பண்ணுவீர்கள் என்று இளையராஜாவிடம் நடிகை ரோகினி கேட்டார். இதற்கு கோபமடைந்த இளையராஜா, ’நான் உன்னிடம் ஷங்கருடன் வேலை செய்ய வாய்ப்பு கேட்க சொன்னேனா’ என்று மிகவும் கடுமையாக ரோஹிணியிடம் நடந்துகொண்டார்.

பிரபல நடிகரின் மனைவியிடம் மோசமாக நடந்துகொண்ட இளையராஜா.. தலைக்கனத்தின் உச்சம் | Ilaiyaraja Humiliated Actress Rohini

அவர் கேட்ட கேள்வியில் ஒரு தப்பும் இல்லாத பட்சத்தில், அவர் ஒரு பெண் என்று கூட பார்க்காமல் இப்படியா கடுமையாக நடந்துகொள்வீர்கள் என்று அதன்பின் பலரும் இளையராஜாவிடம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேள்வி எழுப்பினார்கள். நடிகை ரோகினி, மறைந்த நடிகர் ராகுவாரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.