தலைக்கனத்தில் ஓவராக ஆடிய இளையராஜா.. காசுக்காக இப்படியா பேசுவீங்க

156 Shares

அன்னக்கிளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினி, கமல், என பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் பணிபுரிய துவங்கினார். ஒரு கட்டத்தில் உச்சத்தை தொட்ட இளையராஜா பல சாதனைகளை தொடர்ந்து செய்தார். அதற்கு ஏற்றாற்போல் சம்பளத்தையும் உயர்த்தினார்.

படங்களில் மட்டுமல்லாமல், வாராவாரம் ரசிகர்கள் தனது இசையை நேரில் பார்க்க கான்சர்ட்களை நடத்தி வருவார். அப்படி சில வருடங்களுக்கு முன் இவர் நடத்தி வந்த கான்சர்ட் நிகழ்ச்சி ஒன்றில், தண்ணீர் குடிக்க வந்த வாட்ச்மேன் ஒருவரை கடுமையாக திட்டி விடுவார். ஆனால் அவரோ, இளையராஜாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார்.

அப்போதும் கடுப்பில் இருந்த இளையராஜா அவரை திட்டிக்கொண்டே தான் இருப்பார். இதன்பின், நிகழ்ச்சியில் நான் 5 மணி நேரமாக நிற்கிறேன். ஆனால், நிகழ்ச்சியை பார்க்க வந்த அனைவரும் அமர்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் விட, அனைவரையும் கடுப்பேற்றும் வகையில், 500 ரூபாய் டிக்கெட் வாங்கிய நபர்கள் 5000 ரூபாய் டிக்கெட்டில் அமர்ந்து நிகழ்ச்சியை பார்க்கிறார்கள்.

இது எப்படி சரியாகும், அப்போது 5000 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்கள் எங்கே அமர்ந்து நிகழ்ச்சியை பார்ப்பார்கள் என்று, தனது ரசிகர்கள் மீதும் கடுப்பில் பேசினார். என்னுடைய இசையில் தான் அனைவரும் வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள், என்று தலைக்கனத்துடன் இவர் பேசிய வீடியோ அனைவர் மத்தியிலும் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..


உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்