இறந்த போது கூட வராதா இசைஞானி? எஸ்பிபி-ஐ நினைத்து இப்பமட்டும் உருகும் இளையராஜா..

Ilayaraaja S P Balasubrahmanyam
By Edward Jun 16, 2022 05:52 AM GMT
Report

தமிழ் சினிமாவில் இசையின் குரலாகவும் பல விருதுகளுக்கு சொந்தக்காரராகவும் இருந்து கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் வாழ்ந்து வருபவர் எஸ்பி பால சுப்ரமணியம். கடந்த 2020 செப்டம்பர் மாதம் எஸ்பிபி அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்தது திரையுலகை தாண்டி பலரது இதயத்தில் அதிரவைத்தது.

எஸ்பிபியின் இறுதி அஞ்சலிக்கு பல முன்னணி நட்சத்திரங்கள் அரசியல் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனால் இசைஞானி இளையராஜா பங்கேற்காதது தான் கேள்வியாக இருந்தது. இருவருக்கு இடையில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு வழக்கு வரை கூட சென்றது.

இதற்கு காரணம் இளையராஜா இசையில் உருவாகிய பாடலை ராயல்டி பெறாமல் எஸ்பிபி பாடியது தான். ஆணவத்தில் எஸ்பிபியை கொஞ்சம் கூட மதிக்காமல் இசைஞானி அப்படி நடந்து கொண்டது பலரை வெறுப்படைய செய்தது.

எஸ்பிபியுடன் மட்டுமில்லாமல் வைரமுத்து, மணிரத்னம், பாக்யராஜ், கங்கை அமரன் உட்பட பல பாடகர்களுடன் சண்டை போட்டுள்ளார் இசைஞானி. இந்நிலையில் எஸ்பிபியின் 75 வது பிறந்த நாளை நினைவு கூறும் வண்ணம் ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

அதில் இளையராஜா எஸ்பிபி அவர்கள் பாடிய பாடலை பாடியுள்ளார். பாடும் போது கண்ணீர் விட்டு அழுதது பலரை நெகிழ வைத்தாலும் இருக்கும் போது கவனித்து கொள்ளாதவர் தற்போது கண்ணீர் விட்டு பயன் என்ன என்று விமர்சித்தும் வருகிறார்கள்.