பவதாரிணி மறைவுக்கு கங்கை அமரன் வராத காரணம் இதுதான்!! இருவருக்கும் இடையே நடந்த மோதல்..
நடிகரும், பிரபல சினிமா பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் அடிக்கடி பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சனம் செய்து பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இந்நிலையில் தற்போது இவர், பிரபல இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பேசியுள்ளார். அதில் அவர், "இளையராஜாவை விட கங்கை அமரனுக்குத்தான் அதிக இசை ஞானம் இருக்கிறது. கங்கை அமரன் இசையமைத்த பல பாடல்களுக்கு இளையராஜா தனது பெயரை போட்டுக்கொண்டார்".
"இளையராஜா எல்லாரிடமும் தகராறு செய்வார். அவர் மணிரத்தினம் மற்றும் கே.பால சந்தர் இருவரிடமும் தகராறு செய்ததால் தான் ஏ.ஆர் ரகுமானை அறிமுகப்படுத்தினார்கள்".
"இளையராஜாவுக்கு எப்போதும் பாதுகாப்பு அரணாக கங்கை அமரன் இருந்தார். இருப்பினும் ஒருமுறை கங்கை அமரனை பார்த்து வெளியே போடா நாயே என்று சொல்லிவிட்டார் இளையராஜா".
"அண்ணனுக்கு இவ்ளோ செய்தும் நம்மை மறந்துவிட்டாரே என்ற வருத்தம் கங்கை அமரனிடம் இருக்கிறது. இந்த காரணத்தால் தான் பவதாரிணி உயிரிழப்புக்குக்கூட அவரால் வர முடியவில்லை. இனி அண்ணன் முகத்தில் முழிக்க வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
பொறுப்பு துருப்பு: பயில்வானின் இந்த பேச்சுக்கும் விடுப்பு பக்கத்திற்கு எந்த ஒரு சம்பந்தமும் இல்லை..
You May Like This Video