நடிகையை தரையில் உட்கார வைத்த இளையராஜா.. கோபத்தில் விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷணன்..

Ilayaraaja Gossip Today
1 மாதம் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவில் இசையின் நாயகன், இசைஞானி என்று புகழப்பட்டு வரும் இளையராஜா சமீபகாலங்களாக சில செயல்களால் விமர்சனத்திற்குள்ளாகியும் வருகிறார். அப்படி நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் அவரது விட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தரையில் உட்கார்ந்திருந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இதனை பலர் நடிகையை தரையில் உட்கார வைத்த இசைஞானி. எப்படி ஒரு நடிகைக்கு மரியாதை கொடுக்காமல் தரையில் உட்கார வைக்கலாம் என்ற கருத்துக்களும் சந்திக்க வருபவர்கள் உட்கார கூட ஒரு நாற்காலி வைக்காமலா இருக்கிறார் என்ற கருத்தும் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது.

நான் ஏன் தரையில் உட்கார்ந்திருந்தேன் என்ற விமர்சனத்திற்கு நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றினை கொடுத்துள்ளார்.

அடுத்த படைப்பாக உருவாகி வரும் படத்திற்கு இசைஞானி அவர்கள் இசையமைத்து வருகிறார். ராஜா சார் கடவுளுக்கு சம்மானவர் என்பதால் அவரின் காலடியில் அமர்ந்திருந்தது ஒரு ஆசிர்வாதம் தான்.

அவரை சந்திக்கும் போதெல்லாம் தரையில் உட்காருவது எனக்கு சந்தோஷம் தான். தரையில் உட்காருவது கூட உடல் நலத்திற்கு நல்லது தான் என்று கூறியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.