40 ஆண்டுகால இசைப்பயணம்! ஒரேவொரு நடிகரை ஒதுக்கி வந்த இளையராஜா.. இதுதான் காரணம்
70 காலக்கட்டத்தில் அன்னக்கிளி என்ற படத்தின் மூலம் இசைப்பயணத்தை ஆரம்பித்தவர் இசைஞானி இளையராஜா. இந்தியாவில் பல மொழிப்படங்களில் பணியாற்றிய இசைஞானி சுமார் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கிறார்.
பல ஆயிர கச்சேரிகளையும் நடத்தி இருக்கிறார். கண்ணதாசன், வாலி, வைரமுத்து ஆரம்பித்து பல பாடலாசிரியர்களுடனும், பாலச்சந்தர், பாரதிராஜா, பாலு மகேந்திரா உள்ளிட்ட பல இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.
அதேபோல் முன்னணி நடிகர்கள் 70களில் ஆரம்பித்து தற்போது இருக்கும் நடிகர்கள் வரை இசையமைக்காததே கிடையாது. ஆனால் இளையராஜாவின் 40 ஆண்டுகால இசைப்பயணத்தில் ஒரே ஒருவரை மட்டுமே ஒதுக்கி வந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80களில் ஆல்ரவுண்டராக திகழ்ந்த டி ராஜேந்தர் தான் அது. 1980ல் வெளியான ஒருதலைராகம் படத்தில் இயக்குனராக டி ராஜேந்தர், கதையாசிரியர், இயக்கம், நடிப்பு, தயாரிப்பு, இசையமைப்பாளர் என்று பல பரிமானங்களை கொண்டு சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வந்தார்.
அவரின் 26 படங்களுக்கு அவரே இசையமைத்திருந்ததால், மற்ற இசையமைப்பாளர்கள் அவரின் படத்திற்கு தேவைப்படாமல் போனது. கடைசியாக அவர் இயக்கி நடித்த வீராசாமி படத்திலும் டி ராஜேந்தரே இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.