இளையராஜாவுக்காக ரோட்டில் காத்திருந்த மனோபாலா!! வார்னிங் கொடுத்து அனுப்பிய இசைஞானி..
தமிழ் சினிமாவில் இசை ஜாம்பவனாகவும் இசைஞானியாகவும் திகழ்ந்து வரும் இளையராஜா கடைசியாக விடுதலை படத்திற்கு இசையமைத்திருந்தார். பல்லாயிரக்கணக்கான பாடல்களை கொடுத்த இசைஞானி புகழின் உச்சிக்கே சென்றாலும் சிலர் வெறுப்பையும் சம்பாதித்திருக்கிறார்.
ஒரு காலக்கட்டத்தில் இளையராஜாவின் கால்ஷீட்டிற்காக இயக்குனர்கள் வரிசையில் நிற்கும் நிலை இருந்துள்ளது. ஏன் இப்போது அது நடந்து கொண்டிருக்கிறது. அப்படி தான் மனோபாலா இறப்பிற்கு இரங்கல் தெரிவித்த இளையராஜா, மனோபாலா தனக்காக ரோட்டில் காத்திருந்தவர்களில் ஒருவர் என்று கூறியிருந்தார்.
இதற்கு பலர் விமர்சித்து வந்தனர். ஆனால் அப்போது மனோபாலா ரோட்டில் இளையராஜா கண்படும் படி நின்று கொண்டிருந்தார். பாரதிராஜாவிடம் பணியாற்றும் நபர்களிடம் மரியாதை கொண்டவராக இளையராஜா திகழ்ந்து வந்தார்.
அப்படி இளையராஜாவிடம் பணியாற்றிய மனோபாலாவை அங்கு நிற்பதை பார்த்த உடனே அவரை அழைத்திருக்கிறார். அப்போது மனோபாலாவிடம் இளையராஜா, நீங்களும் மற்றவர்களும் ஒன்றா, எதற்காக இப்படி என் கண்படும் படி நிற்கிறீர்கள், இனிமேல் இப்படி செய்யாதீர்கள் என்று வார்னிங் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தை பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.