அதை பார்த்து ஒன்னுமே தோணல.. ஆணவத்தில் ரகுமான் திறமையை இகழ்ந்து பேசிய இசைஞானி!!
A R Rahman
Ilayaraaja
Ponniyin Selvan 2
By Jai
80, 90களில் தன் கோட்டையை பிடித்து வந்தவர் இசைஞானி இளையராஜா. பல ஆயிரம் பாடல்களை உருவாக்கிய இளையராஜா இடையில் ஏடாகூடாமான விசயத்தை செய்து சிலரின் வெறுப்பை சம்பாதித்தார்.

விடுதலை படத்தில் சிறப்பான இசையை கொடுத்த இசைஞானி சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தினை பார்த்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
அதில், பொன்னியின் செல்வன் படத்தை பார்த்த போது, பொன்னியின் செல்வன் படம் மாதிரியே இல்லை என்றும் கல்கியின் நூலை பல முறை படித்து அதில் ஊறிப்போனதால் இதில் வரும் கதாபாத்திரங்கள் தனக்கு பெரியளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஒருவரின் படைப்பு பற்றி புகழலாம் ஆனால் இகழ்ந்து பேசக்கூடாது என்று பலரின் கருத்து இளையராஜா மீது எழுந்துள்ளது.