விஜய் மகன் சஞ்சய் மகள் திவ்யாவை விடாது துரத்தும் பிரச்சனை.. கடைசியில் இப்படியாகிபோச்சே..

Vijay Varisu jason sanjay
By Edward Aug 26, 2022 04:40 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் தற்போது வாரிசு படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். கிடைக்கும் நேரத்தில் தன் குடும்பத்துடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார் நடிகர் விஜய் சங்கீதாவை 1999ல் திருமணம் செய்து ஜேசன் சஞ்சய், திவ்ய சாஷா என்ற இரு குழந்தைகளை பெற்றார்.

தற்போது மகன் சினிமா சம்பந்தமான பட்டப் படிப்பை முடித்தும் மகள் பள்ளி படிப்பை படித்து வருகிறார்கள். சமுகவலைத்தளத்தில் விஜய் எப்பவாது தான் படத்தின் டிரைலர், டீசரை வெளியிட மட்டும் வருவார். ஆனால் விஜய்யின் மகன், மகள் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாகவோ அவர்களுக்கென கணக்குகளோ இல்லை.

அப்படியிருக்கும் போது சஞ்சய், திவ்யா இருவரின் போலியான பெயரில் இருக்கும் டிவிட்டர் கணக்கில் இருந்து சில புகைப்படங்களும் தனிப்பட்ட வீடியோக்களும் வெளியாகியது. இதுகுறித்து, விஜய் தரப்பில் இருந்து அது போலியான கணக்கு என்று கூறப்பட்டது.

இந்நிலையில், விஜய்யின் வாரிசு படத்தில் லீக் வீடியோவை கண்டித்து பலர் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதற்கு ஜேசன் சஞ்சய் பெயரில் இருக்கும் டிவிட்டர் பக்கத்தில், தயவு செய்து வாரிசு படத்தின் ஷூட்டை லீக் செய்ய வேண்டாம் என்ற பதிவிடப்பட்டது.

இதனை பிரபல தொலைக்காட்சி சேனல்களுல் மீடியாக்காவும் விஜய் மகன் வேண்டுகோள் என்று செய்தியை வெளியிட்டனர். இதுகுறித்து பிஆர் ரியாஷ் கே அஹமத் அவரது டிவிட்டர் பக்கத்தில் அது போலியான கணக்கு என்று உறுதியாக கூறியுள்ளார்.