தனுஷ் அமலா பால் மீது நடவடிக்கை..பரபரப்பை ஏற்படுத்தும் திரையுலகம்!
Atharvaa
Dhanush
Silambarasan
Amala Paul
Yogi Babu
By Dhiviyarajan
சமீபத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தேனாண்டாள் முரளி தலைமையிலான நடந்து முடிந்த பொது குழுவில் பல முக்கியமான முடிவுகள் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
பட நடிப்பதாக கூறி தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கி நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் நடிகர் நடிகைகளுக்கு ரெட் கார்ட் கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.
நடிகர் சிம்பு மீது வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் புகார் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் வலம் வரும் தனுஷ் மீதும் புகார் பாய்ந்துள்ளது.
இந்த லிஸ்டில் அமலா பால் எஸ்.ஜே. சூர்யா, விஷால், யோகி பாபு மற்றும் அதர்வா போன்ற நட்சத்திரங்கள் பெயரும் இடம் பெற்று இருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.