Head-டுக்கு ஹெட் மேல அடி!! இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி மீம்ஸ்கள்..
இந்தியா - ஆஸ்திரேலியா
ஐசிசி சாம்பியன் டிராபி 2025 தொடர் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அறையிறுதி போட்டிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் தேர்வான நிலையில் நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா போட்டி நடந்து முடிந்தது.
சிறப்பாக பந்துவீசிய இந்திய அணியின் ஆஸ்திரேலியாவை 264 ரன்களில் சுருட்டியது. இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணியினர், சிறப்பான ஆட்டத்தை காட்டி வெற்றிப்பெற்று இறுதி போட்டிக்கு தேர்வாகினர். ஆனால் போட்டியில் 84 ரன்கள் அடித்த விராட் கோலி அவுட்டாகியதால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியாகினர்.
அதேபோல் இந்தியாவின் தலைவலி என்று கூறப்படும் டிராவிஸ் ஹெட், 39 ரன்கள் மட்டும் அடித்து அவுட்டாகினார். இதனை இந்திய ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், விராட் கோலியின் சதம் மிஸ் ஆனதை வைத்து ஹெட் அவுட்டானதை வைத்து மீம்ஸ்களை கிரியேட் செய்து இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
மீம்ஸ்கள்




