துபாயில் சொத்து வைத்துள்ள இந்திய பிரபலங்கள்..யார் யார் தெரியுமா?

Aishwarya Rai Dubai Shah Rukh Khan Salman Khan
By Edward Mar 02, 2026 04:30 AM GMT
Report

துபாய்

சினிமா பிரபலங்கள் சொகுசு வாழ்க்கைக்காக உலகின் பல பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். அப்படி உலத்தரம் வாய்ந்த வசதிகளுடன் கடற்கரை வில்லாக்கள், வானுயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பகள் போன்ற இடங்களை வாங்குவார்கள். அப்படி துபாயில் ஆடம்பரமான மாளிகளைகளை வைத்திருக்கும் சினிமா பிரபலங்கள் யார் யார் எவ்வளவு தொகையில் வாங்கியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்..

துபாயில் சொத்து வைத்துள்ள இந்திய பிரபலங்கள்..யார் யார் தெரியுமா? | Indian Celebrities Who Own Residences In Dubai

துபாயின் ஜுмейரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் (Jumeirah Golf Estates) பகுதியில் ஒரு சொகுசு வீட்டினை அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் ஜோடி வாங்கியிருக்கிறார்கள். அதன் மதிப்பு சுமார் ரூ. 16 கோடியாம். அங்கு நீச்சல் குளம், கோல்ஃப் மைதானம், சுற்றுலா பகுதி போன்ற வசதிகள் இருக்கிறது. துபாய் எமிரேட்ஸ் ஹில்ஸில் ஒரு மாளியையும் வாங்கியுள்ளனர்.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் விடுமுறை, நிகழ்வுகள், பட விளம்பரங்களுக்காக அடிக்கடி துபாய் செல்வதால் நகரில் ஒரு சொத்தை வாங்கியிருக்கிறார்.

பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான், துபாய் பாம் ஜுмейராவில் ஒரு மாளிகையை வைத்துள்ளார். ஆடம்பர அலங்காரம் மற்றும் தனியார் கடற்கரை அணுகலுக்கு பெயர் பெற்ற இடம் தான் அது.

நடிகை ஷில்பா ஷெட்டி, துபாயுடன் தனித்துவமான தொடபை வைத்திருக்கிறார். 2010ல் அவரது கணவர் ராஜ் குந்த்ரா, புர்ஜ் கலீஃபாவில் சுமார் ரூ. 50 கோடி மதிப்புள்ள ஒரு பிளாட்டை வாங்கி பரிசளித்திருக்கிறார். மேலும் துபாயின் ஜுмейராவில் ஒரு சொகுசு வீட்டையும் ஷில்பா ஷெட்டி வாங்கியிருக்கிறார்.

துபாயில் சொத்து வைத்துள்ள இந்திய பிரபலங்கள்..யார் யார் தெரியுமா? | Indian Celebrities Who Own Residences In Dubai

வேலை, விடுமுறைக்காக துபாய்க்கு செல்லும் மூத்த நடிகர் அனில் கபூர், அங்கு சொத்துக்களிலும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

கரண் குந்த்ரா - தேஜஸ்வி பிரகாஷ் கடந்த் 2022ல் துபாயில் தங்களின் முதல் வீட்டை ரூ. 2 கோடிக்கு டான்யூப் பிராப்பர்டீஸில் முழு வசதிகளுடன் கூடிய சொத்த வாங்கினர். இங்கு தனியார் நீச்சல் குளமும் இருக்கிறது.

நடிகை ராக்கி சாவந்த், கடந்த 2022ல் துபாயிலுள்ள டான்யூப் பிராப்பர்டீஸில் ஒரு சொத்த வாங்கியிருக்கிறார். இந்த சொத்து தங்கம் மற்றும் வெள்லை நிறத்தில், நவீன அலங்காரங்கள், விசாலமான உடை மாற்றும் அறையும் இருக்கிறது.

சோஹைல் கான் துபாயின் புர்ஜ் பசிபிக் திட்டத்தில் பல யூனிட்களில் முதலீடு செய்து குடும்பத்தினருடன் அங்கு வரும்போது தங்குவாராம்.