அம்பானி, அதானி கிட்டக்கூட இந்த கார்கள் இல்லை!! சென்னையில் இப்படியொரு தொழிலதிபரா..
விலையுயர்ந்த கார்
உலகின் டாப் 20 பணக்காரர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி. பலவிதமான விலையுயர்ந்த கார்களை வாங்கி வைப்பதில் ஆர்வம் கொண்டவர்.
அப்படி உலகின் அதிக விலையுயர்ந்த கார்களை வைத்திருக்கும் அம்பானியையே வியக்க வைக்கும் ஒரு காரை வைத்திருக்கிறார் சென்னையை சேர்ந்த ஒரு தொழிலதிபர். அந்த தொழிலதிபர், சமீபத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் கார் வாங்கியது மட்டுமின்றி ஒரு லக்சரி காரான ஃபெராரி கார் ஒன்றினை வாங்கி உலா வந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாஷ்யம் யுவராஜ்
சுமார் 8.5 கோடி ரூபாய் மதிப்பினால பிராண்ட் - நியூ ஃபெராரி கார் வைத்திருப்பவர் தான் சென்னையை சேர்ந்த கட்டுமான நிறுவனமான பாஷ்யம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்-இன் நிறுவனர் பாஷ்யம் யுவராஜ்.
உலகளவில் பிரபலமான அல்ட்ரா - லக்சரி ரோல்ஸ் - ராய்ஸ் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் காரான ஸ்பெக்டர்-ஐ இந்தியாவில் வாங்கிய முதல் கஸ்டமர் என்ற மரியாதையை பாஷ்யம் யுவராஜ் பெற்றுள்ளார்.
இதன்மூலம் இந்திய கார் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த பாஷ்யம் யுவராஜ், ஸ்பெக்டர் கார் வாங்கிய சில மாதத்தில் ரோல்ஸ்-ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் காரை வாங்கியிருக்கிறார். அவரிடம் ஏற்கனவே இரண்டு ஸ்பெக்டர் கார் வைத்திருக்கிறாராம்.
அதுமட்டுமில்லாமல் பல கோடி ரூபாய் மதிப்புள்ள மற்றுமொரு விலையுயர்ந்த காரான ஃபெராரி Verde GB23 shade கார் ஒன்றினை வாங்கியுள்ளார். 12 சிலிண்ட்ரி என்கிற சுமார் ரூ. 8.5 கோடி மதிப்புள்ள ஃபெராரி கார் தான் அது. இந்த காரும் இந்தியாவில் வாங்கிய முதல் கஸ்டமர் பாஷ்யம் யுவராஜ் தானாம்.