நீ யாரா வேணாலும் இரு!! ஆர்பிசியை கதறவிட்ட சூர்யவன்ஷி..
2026 ஐபிஎல் தொடரின் ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நேற்று எதிர்கொண்டது. சிறப்பாக விளையாடிய ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்களை சேர்த்தது. இதனை தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் - வைபவ் சூர்யவன்ஷி கூட்டணி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே சூர்யவன்ஷி 2 பவுண்டரிகளை விளாசினார். 20 பந்தில் அரைசதம் அடித்த 3வது வீரராக திகழ்ந்தார். ஆர்சிபியின் அனுபவம் வாய்ந்த வீரர்களின் பந்துகளை புரட்டி போட்டி அடித்து தள்ளினார் சூர்யவன்ஷி.
Inaiku adichuru suryavansi 😍😍 pic.twitter.com/DGreHa4xUY
— Lungi boys (@rajpriyan007) April 10, 2026
நீ யாரா வேணாலும் இரு, நான் சூர்யவன்ஷி என்று கூறும் அளவிற்கு 26 பந்துகளில் 7 சிக்ஸ், 8 பவுண்டரிகள் அடித்து 78 ரன்களை சேர்ந்து அவுட்டாகினார் சூர்யவன்ஷி. இதனைடுத்து ஆடிய வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் ராஜஸ்தான் அணி சிறப்பான வெற்றியை கண்டது.

ஆர்சிபி ஆணியை வீழ்த்தி ராஜ்ஸதான் புள்ளி பட்டியலில் முதல் இடத்தினை பிடித்துள்ளது. சிஎஸ்கே, மும்பை, ஆர்சிபி போன்ற டாப் அணிகளை சூர்யவன்ஷி தன்னுடைய ஆட்டத்தால் சின்னாபின்னாமாக்கிவிட்டார்.
சூர்யவன்ஷியின் இந்த ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் ஆர்சிபி அணியை கலாய்த்து வருகிறார்கள்.
சூர்யவன்ஷி.💥💥💥 pic.twitter.com/CTM1xZouJd
— Dr.Aravind Raja (@AravindRajaOff) April 10, 2026
Tag that Rcb fans😍hennai comeback la than t shirt maarum athu varai unga kooda irunthey ungala seiyanum😂 just for fun nanbaas pic.twitter.com/SDC786in2O
— Lungi boys (@rajpriyan007) April 10, 2026