வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டாரா?
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள் உலா அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிம் ஜாங் உண்ணுக்கு திடீரென மூளையில் கடுமையாக ரத்தக்கசிவு ஏற்பட்டு, அவர் கோமா நிலைக்கு சென்றதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க சீன மருத்துவ நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் சீன ஜனநாயகக் கட்சியின் (China Democracy Party) தலைவர் வான்ஜுன் ஷியே (Wanjun Xie) என்பவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கிம் ஜாங் உன்னை அவசர சிகிச்சைக்காக பெய் கிங்கிற்கு அழைத்து சென்றதாகவும், மருத்துவர்களின் முயற்சிகள் பலனளிக்காததால் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுமட்டுமின்றி கிம் ஜாங் உன் மரணமடைந்து, அவருக்கு பதிலாக அவரது சகோதரி ஆட்சி பொறுப்பை கைப்பற்றிவிட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால், இதற்கு நம்பகமான ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதால், சமூக வலைத்தளங்களில் பரவிய தகவல்கள் உண்மையா என்கிற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த ஸ்டூலில், கிம் ஜாங் உன் தனது மனைவி மற்றும் மகளுடன் ஆடை மற்றும் காலனி கண்காட்சியில் பங்கேற்றதாக வடகொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால், அவர் இறந்துவிட்டதாக வந்த செய்திகள் உண்மையா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இருப்பினும், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக வெளியான செய்தி மட்டுமே அவரது உடல்நிலை குறித்த அனைத்து சந்தேகங்களுக்கும் முழுமையான விளக்கமாகாது என்றும் கூறப்படுகிறது.
