ரஜினியுடன் இணைந்து லதா ரஜினிகாந்த் இந்த படத்தில் நடித்துள்ளாரா?
Rajinikanth
Latha Rajinikanth
By Yathrika
ரஜினி
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது மனைவி லதா ரஜினி பாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
ரஜினியின் கோச்சடையான் படத்தில் ஒரு பாடல் பாடியிருப்பார், ஆனால் லதா ரஜினிகாந்த் ஒரு படத்தில் தனது கணவருடன் இணைந்து நடித்திருப்பார்.
அது என்ன படம் என்றால் அக்னி சாட்சி.
கடந்த 1982-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை கே.பாலச்சந்தர் இயக்கி இருந்தார். இதில் சிவக்குமார், சரிதா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இதில் ரஜினிகாந்த், ரஜினியாகவே கேமியோ ரோலில் நடித்திருப்பார்.
அதில் ரஜினியின் மனைவியாக லதா ஒரு காட்சியில் மட்டும் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார்.