சதுரங்க வேட்டை பட நாயகி இஷாரா நியாபகம் இருக்கா.. ஆள் அடையாளம் தெரியாமல் போய்ட்டாங்க..
Tamil Actress
By Edward
சினிமாவை பொறுத்தவரை ஒருசில நடிகைகள் நடித்த சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார்கள். அப்படி பணமோசடி குறித்து பல்வேறு கருத்துக்களை கொண்டு இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் நடராஜ் நடிப்பில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சதுரங்க வேட்டை படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்றவர் நடிகை இஷாரா நாயர்.
வெண்மேகம் என்ற படத்தில் அறிமுகமாகிய இஷாரா, இவன் யாரென்று தெரிகிறதா, எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
அதன்பின் சினிமா வாய்ப்பில்லாமல் துபாய் வாழ் தமிழ்ர் சஹில் என்பவரை திருமணம் செய்து துபாயிலேயே கணவருடன் செட்டிலாகிவிட்டார்.
தற்போது அவருக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் இஷாரா நாயரின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


